செய்திகள்
விபத்து பலி

சூளகிரி அருகே விபத்தில் தொழிலாளி பலி

Published On 2021-08-31 14:36 IST   |   Update On 2021-08-31 14:36:00 IST
சூளகிரி அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:

சூளகிரி கீழ் தெருவை சேர்ந்தவர் ஹரிபிரசாத் (வயது 32). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மொபட்டில் சூளகிரி மார்க்கெட் பக்கமாக சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் மொபட் மீது மோதியது. இதில் ஹரிபிரசாத் தவறி கீழே விழுந்தார். பின்னால் வந்த வாகனங்கள் ஹரிபிரசாத் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News