செய்திகள்
தற்கொலை

தேன்கனிக்கோட்டை அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2021-08-29 16:27 IST   |   Update On 2021-08-29 16:27:00 IST
தேன்கனிக்கோட்டை அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சின்ன அத்திகோட்டை பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 40). தொழிலாளி. குடும்ப தகராறு காரணமாக இவருடைய மனைவி, அவரை பிரிந்து சென்று விட்டார். இந்த நிலையில் ராமமூர்த்தி அவருக்கு போன் செய்து, குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த ராமமூர்த்தி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News