செய்திகள்
மஞ்சள், சோளம் பயிர் செய்துள்ளதால் இந்த மழை மிகவும் பயனுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. ஈரோட்டில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்தநிலையில் மதியம் 3 மணி அளவில் வானில் திடீரென கருமேகங்கள் திரண்டன. அதன்பிறகு மழை பெய்ய தொடங்கியது. சிறது நேரத்தில் பலத்த மழையாக பெய்தது. ஆனால் நீண்ட நேரம் மழை பெய்யாமல், சுமார் ½ மணி நேரம் மட்டுமே பெய்தது. அதன்பிறகு சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சிவகிரியில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 2.30 மணி அளவில் இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
சுமார் 45 நிமிடம் மழை கொட்டித்தீர்த்தது. சிவகிரி, வேட்டுவபாளையம், கந்தசாமிபாளையம், ரங்கசமுத்திரம், கவுண்டம்பாளையம் மற்றும் அதன் சுற்று பகுதியிலும் பரவலாக மழை பெய்தது. கருகி வரும் பயிர்களை காப்பாற்ற இந்த மழை உதவியாக இருக்கும் என அந்த பகுதி விவசாயிகள் தெரிவித்தார்கள்.
இதேபோல் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மதியம் 1 மணி முதல் 2 மணி வரையும், மீண்டும் மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரையும் மழை பெய்தது. அதனால் அந்தியூர் வாரச்சந்தையில் விற்பனை பாதிக்கப்பட்டது. தவுட்டுபாளையம், செல்லம்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சென்னிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 3 மணி முதல் சூரியன் மறைந்து வானம் இருண்ட நிலையில் காணப்பட்டது. பின்னர் மாலை 4 மணி முதல் லேசான மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர்.
கொடுமுடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை 3.30 மணி முதல் 5.30 மணி வரை பலத்த மழை பெய்தது. தற்போது மஞ்சள், சோளம் பயிர் செய்துள்ளதால் இந்த மழை மிகவும் பயனுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
ஊஞ்சலூர், தாமரைப்பாளையம், தேவம்பாளையம், கொளாநல்லி ஆகிய பகுதிகளில் நேற்று மதியம் 2 மணி முதல் 3.30 மணி வரை தொடர்ந்து மிதமான மழை பெய்தது. 3 மணிக்கு மேல் நடுப்பாளையம், சோளங்காபாளையம், பாசூர் ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து மிதமான மழை நீடித்தது. இதனால் இந்தப் பகுதிகளில் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியது.
அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. அதன்பின்னர் மதியம் 1 மணி அளவில் லேசான மழையாக ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் பலத்த மழையாக மாறி ஒரு மணி நேரம் பெய்தது. இதனால் வாடிய பயிர்கள் புத்துயிர் பெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.