செய்திகள்
பிரேமலதா விஜயகாந்த்

ஓசூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்- பிரேமலதா விஜயகாந்த் உள்பட 350 பேர் மீது வழக்கு

Published On 2021-08-22 10:56 IST   |   Update On 2021-08-22 10:56:00 IST
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஓசூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் உள்பட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஓசூர்:

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தே.மு.தி.க. சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில்
தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் உள்பட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தற்போது கொரோனா கால தடை உத்தரவை மீறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒரே நேரத்தில் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார், ஓசூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் ஓசூர் போலீசார்,
தே.மு.தி.க.
பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட 350 தே.மு.தி.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News