செய்திகள்
கொரோனா வைரஸ்

ஈரோட்டில் மேலும் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2021-08-21 16:51 IST   |   Update On 2021-08-21 16:51:00 IST
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்தை கடந்து 97,016 ஆக உயர்ந்தது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தினசரி பாதிப்பு குறைந்து வந்த நிலையில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 158 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு 147 ஆக இருந்த நிலையில் நேற்று கூடுதலாக 11 ஆக அதிகரிப்பு 158 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்தை கடந்து 97,016 ஆக உயர்ந்தது. ஒரே நாளில் 168 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 94 ஆயிரத்து 574 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 642 பேர் உயிரிழந்து உள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 1,800 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News