செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
கிருஷ்ணகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசார் அவதானப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த மாது (வயது42), நாகராஜ் (35), சுரேஷ் (26), முருகேஷ் (46), மாயன் (50), சண்முகம் (38) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.