செய்திகள்
ஊத்தங்கரை அருகே விபத்தில் தொழிலாளி பலி
ஊத்தங்கரை அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லாவி:
ஊத்தங்கரை அருகே உள்ள கொட்டுகாரம்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 48). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மோட்டார்சைக்கிளில் கொட்டுகாரம்பட்டி-கேத்துநாயக்கன்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த பெருமாள் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.