செய்திகள்
கைது

ராயக்கோட்டை அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

Published On 2021-08-07 21:00 IST   |   Update On 2021-08-07 21:00:00 IST
ராயக்கோட்டை அருகே ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:

ராயக்கோட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசு தலைமையிலான போலீசார், ராயக்கோட்டை அரசு மருத்துவமனை அருகில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் ரேஷன் அரிசியை கடத்தியது தெரிய வந்தது. உடனே போலீசார் அந்த வாகனத்தில் 14 மூட்டைகளில் இருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துஅவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர், கிருஷ்ணகிரி அடுத்த உஸ்தலஹள்ளியை சேர்ந்த அரவிந்த் (வயது 20) என்பது தெரிய வந்தது.

Similar News