செய்திகள்
விபத்து பலி

கிருஷ்ணகிரி அருகே விபத்தில் வாலிபர் பலி

Published On 2021-08-07 18:29 IST   |   Update On 2021-08-07 18:29:00 IST
கிருஷ்ணகிரி அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மோகன் ராவ் காலனியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 17). அவருடைய நண்பர் ராஜேஷ். இருவரும் கிருஷ்ணகிரி - காட்டிநானம்பட்டி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை ராஜேஷ் (18) ஓட்டிச் சென்றார். அப்போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள், சாலையின் நடுவில் இருந்த இரும்பு தடுப்பு கம்பியில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராஜேஷ் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Similar News