செய்திகள்
தற்கொலை

பாரூர் அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2021-08-06 15:08 IST   |   Update On 2021-08-06 15:08:00 IST
பாரூர் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:

பாரூர் அருகே உள்ள குடிமேனஅள்ளியை சேர்ந்தவர் மணி (வயது 45), கூலித் தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. மேலும் இவருக்கு வயிற்று வலி இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த அவர் விஷத்தை குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக காரிமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மணி இறந்தார்.

Similar News