செய்திகள்
கொரோனா வைரஸ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி

Published On 2021-08-06 15:02 IST   |   Update On 2021-08-06 15:02:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் ஒருவரும், மூதாட்டி ஒருவரும் பலியானார்கள்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர் கொரோனா பாதிப்புடன் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.

இதேபோல் கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 75 வயது மூதாட்டி, கொரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.

இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 22 பேர் பாதிக்கப்பட்டனர். 17 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். 2 பேர் இறந்தனர். இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 41 ஆயிரத்து 497 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 40 ஆயிரத்து 847 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். 326 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 324 ஆக உள்ளது.

Similar News