செய்திகள்
ஆடிப்பெருக்கை முன்னிட்டு தென்பெண்ணை ஆற்றில் பக்தர்கள் புனித நீராடிய போது எடுத்த படம்.

காற்றில் பறந்த கலெக்டர் உத்தரவு- காவேரிப்பட்டணம் தென்பெண்ணையாற்றில் புனித நீராடிய பக்தர்கள்

Published On 2021-08-03 05:05 GMT   |   Update On 2021-08-03 05:05 GMT
காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றில் மாவட்ட கலெக்டர் உத்தரவை காற்றில் பறக்க விட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் கொரோனா பரவல் அச்சமின்றி ஆடி பெருக்கை முன்னிட்டு புனித நீராடினர்.
காவேரிப்பட்டணம்:

தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைகிணங்க கொரோனா நோய் தொற்று நடவடிக்கையின் தொடர்ச்சியாக, கூடுதல் தளர்வுகளின்றி வருகிற 9-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று நீர்நிலை பகுதிகளான கிருஷ்ணகிரி அணை மற்றும் தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் உள்ள நீர்நிலைகள் மற்றும் ஆலயங்களில் பொதுமக்கள் வழிபாடு செய்வதற்கும், நீராடுவதற்கும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றில் மாவட்ட கலெக்டர் உத்தரவை காற்றில் பறக்க விட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் கொரோனா பரவல் அச்சமின்றி ஆடி பெருக்கை முன்னிட்டு புனித நீராடினர். மேலும், அவர்கள் தங்களது வாகனங்களை ஆற்றில் கழுவி சுத்தப்படுத்தினர். கொரோனா பரவல் அச்சமின்றியும், மாவட்ட கலெக்டர் உத்தரவை மீறியும் செயல்பட்டனர்.
Tags:    

Similar News