செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுவையில் மேலும் 54 பேருக்கு கொரோனா

Published On 2021-08-03 08:38 IST   |   Update On 2021-08-03 08:38:00 IST
புதுவையில் உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடைவது 97.74 சதவீதமாகவும் உள்ளது.
புதுச்சேரி:

புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 395 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 54 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 1 லட்சத்து 21 ஆயிரத்து 59 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலையில் 182 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 762 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 92 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று உயிரிழப்பு ஏதும் இல்லை.

புதுவையில் உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடைவது 97.74 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர் ஒருவரும், பொதுமக்கள் 498 பேரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதுவரை 7 லட்சத்து 10 ஆயிரத்து 208 டோஸ் தடுப்பூசிபோடப்பட்டுள்ளது.


Similar News