செய்திகள்
புதுச்சேரி

புதுச்சேரியில் திரையரங்குகள் மற்றும் மது பார்களை திறக்க அனுமதி

Published On 2021-08-01 00:14 IST   |   Update On 2021-08-01 00:14:00 IST
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது
புதுச்சேரி:

புதுச்சேரியில் தினசரி கொரோனா  பரவல் 100-க்கு கீழ் குறைந்ததை தொடர்ந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஆகஸ்ட் 15-ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய தளர்வுகளின்படி, கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும், 100 பணியாளர்களுடன் திரைப்படம், தொலைக்காட்சி தொடர்களுக்கான படப்பிடிப்பு நடத்தலாம். சுற்றுலாத் தலங்களில் கொரோனா தடுப்பு விதிகளுடன் 50 சதவீதம் பேர் வரை அனுமதிக்கலாம். மதுபானக் கடைகளுடன் இருக்கும் பார்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Similar News