செய்திகள்
காவேரிப்பட்டணம் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது
காவேரிப்பட்டணம் அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் ஒன்றியம் நாகரசம்பட்டி போலீசார் அகரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பறைக்கொட்டாய் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற கோபால் (வயது 52) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.