செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

புதுவையில் மேலும் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2021-07-30 02:50 GMT   |   Update On 2021-07-30 02:50 GMT
புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் 4 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
புதுச்சேரி:

புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 126 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 98 பேருக்கு தொற்று உறுதியானது. தற்போது 195 பேர் ஆஸ்பத்திரி களிலும், 777 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

புதுவையில் இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரத்து 725 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று 49 பேர் குணமடைந்துள்ளனர். நேற்றைய தினம் உயிரிழப்பு ஏதும் இல்லை.

புதுவையில் உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடைவது 97.71 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 10 பேரும், முன்கள பணியாளர்கள் 3 பேரும், பொதுமக்கள் 2 ஆயிரத்து 890 பேரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதுவரை 6 லட்சத்து 90 ஆயிரத்து 890 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் 4 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 2 பேர் 5 வயதுக்குட்பட்டவர்கள். 2 பேர் 5 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். அதுமட்டுமின்றி 2 குழந்தைகள் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News