செய்திகள்
கொரோனா வைரஸ்

புதிதாக 86 பேருக்கு கொரோனா- தொற்று பாதித்த 5 குழந்தைகளுக்கு சிகிச்சை

Published On 2021-07-27 02:21 GMT   |   Update On 2021-07-27 02:21 GMT
புதுவையில் புதிதாக 86 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒருவர் உயிரிழந்த நிலையில், தொற்று பாதித்த 5 குழந்தைகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:

புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 766 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 86 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது ஆஸ்பத்திரிகளில் 173 பேர், வீடுகளில் 736 பேர் என 909 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று 98 பேர் குணமடைந்தனர். அதேநேரத்தில் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ரெட்டியார்பாளையம் சுதாகர் நகரை சேர்ந்த 59 வயது ஆண் பலியானார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,790 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 7 குழந்தைகள் உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களில் 3 பேர் 5 வயதுக்கு உட்பட்டவர்கள், 2 பேர் 5 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.

புதுவையில் உயிரிழப்பு 1.49 சதவீதமாகவும், குணமடைவது 97.76 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 2 பேரும், பொதுமக்கள் 791 பேரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதுவரை 6 லட்சத்து 77 ஆயிரத்து 446 ேடாஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News