செய்திகள்
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 101 வயது மூதாட்டி

101 வயது மூதாட்டிக்கு கொரோனா தடுப்பூசி- வீடு தேடிச்சென்று மருத்துவ குழுவினர் போட்டனர்

Published On 2021-07-23 05:38 GMT   |   Update On 2021-07-23 05:38 GMT
உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், வயதானோர், நோய்வாய்பட்டு படுக்கையில் உள்ளவர் களுக்கு சுகாதாரத்துறை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
திருபுவனை:

புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் வருகிற ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வகையில் தடுப்பூசி திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது. உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், வயதானோர், நோய்வாய்பட்டு படுக்கையில் உள்ளவர் களுக்கு சுகாதாரத்துறை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் முதலியார்பேட்டை சிவா-விஷ்ணு நகரை சேர்ந்த 101 வயது மூதாட்டி கோவிந்தம்மாளுக்கு முதலியார்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சரண்யா தலைமையிலான மருத்துவ குழுவினர் கொரோனா தடுப்பூசி போட்டனர்.

இது குறித்து மூதாட்டி கோவிந்தம்மாள் கூறுகையில், 50 ஆண்டுகளுக்கு முன்தட்டம்மை தடுப்பூசியை கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு வீடுதோறும் சென்று போட்டார்கள். தற்போது வீடுதோறும் கொரோனா தடுப்பூசியை செலுத்தி வருகிறார்கள். என்னைப் போன்று வயதானவர்களுக்கு இது உதவியாக உள்ளது என்றார்.
Tags:    

Similar News