செய்திகள்
காய்கறிகள்

ஓசூரில் வாகனங்களில் விற்கும் காய்கறிகள் விலை உயர்வு- பொதுமக்கள் அதிர்ச்சி

Published On 2021-06-01 19:57 IST   |   Update On 2021-06-01 19:57:00 IST
ஓசூர் மாநகராட்சி சார்பில் பொதுமக்களின் நலன்கருதி காய்கறிகள் மற்றும் பழவகைகளை நடமாடும் வாகனம் மூலம் நகரின் பல்வேறு பகுதிகளில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஓசூர்:

கொரோனா முழு ஊரடங்கையொட்டி, ஓசூர் மாநகராட்சி சார்பில் பொதுமக்களின் நலன்கருதி காய்கறிகள் மற்றும் பழவகைகளை நடமாடும் வாகனம் மூலம் நகரின் பல்வேறு பகுதிகளில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் நடமாடும் வாகனங்களில் விற்கப்படும் காய்கறிகள், பழவகைகளின் விலை, சந்தை விலையைவிட அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் இதனை தீவிரமாக கண்காணித்து, அதிக விலைக்கு விற்பதை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர். தவிர ஒசூரில் என்.ஜி.ஓ. காலனி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நடமாடும் வாகனம் வருவதில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News