செய்திகள்
கோப்புபடம்

சிவகாசி அருகே தீக்குளித்து மூதாட்டி தற்கொலை

Published On 2021-05-30 18:11 IST   |   Update On 2021-05-30 18:11:00 IST
சிவகாசி அருகே தீக்குளித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:

சிவகாசி அருகே உள்ள கிச்சநாயக்கன்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜாமணி என்பவரின் மனைவி ஜானகி அம்மாள் (வயது 80). இவரது கணவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த நிலையில் தனது மகன் சுப்புராஜ் என்பவருடன் வசித்து வந்தார். கடந்த 2006-ல் சென்னையை சேர்ந்த பெண்ணை சுப்புராஜ் திருமணம் செய்து கொண்டார். 

பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2010-ல் பிரிந்து விட்டனர். தனது மகனுக்கு சரியான வாழ்க்கை அமையவில்லை என்று ஜானகி அம்மாள் அவ்வப்போது கூறி வருத்தப்பட்டுள்ளார். இந்தநிலையில் அவர் தனது வீட்டின் முன்பு திடீரென தீக்குளித்தார். உடல் முழுவதும் எரிந்த நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சுப்புராஜ் கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News