செய்திகள்
கோப்புப்படம்

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 818 பேருக்கு கொரோனா - பலி எண்ணிக்கை 380 ஆக உயர்வு

Published On 2021-05-29 18:25 GMT   |   Update On 2021-05-29 18:25 GMT
மாவட்டத்தில் மேலும் 818 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 35,880 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 818 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பலி எண்ணிக்கை 380 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் மேலும் 818 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 35,880 ஆக உயர்ந்துள்ளது.

27,329 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 8, 172 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் 8 பேர் பலியாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 380 ஆக உயர்ந்து உள்ளது.

மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,083 படுக்கைகள் உள்ள நிலையில் 969 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 114 படுக்கைகள் காலியாக உள்ளன.

சிகிச்சை மையங்களில் 1538 படுக்கைகள் உள்ள நிலையில் 997 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 541 படுக்கைகள் காலியாக உள்ளன.

விருதுநகர் வேல்சாமி நகர், அரசு ஆஸ்பத்திரி, பாவாலி ரோடு, மீசலூர், ஸ்டேட் பாங்க் காலனி, பாத்திமா நகர், சிவன் கோவில் தெரு, ஆமத்தூர், கட்டையாபுரம், புல்லலக்கோட்டை, சுப்பையா தெரு, கலெக்டர் அலுவலகம், கருப்பசாமி நகர், மதுரை ரோடு, பாண்டியன் நகர், மேலரதவீதி, அல்லம்பட்டி, பேராலிரோடு, முத்துராமன் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் முகவூர், தளவாய்புரம், நாச்சியார் புரம், ஜமீன் கொல்லங்கொண்டான், கிருஷ்ணாபுரம், வத்திராயிருப்பு, மகாராஜபுரம், எரிச்சநத்தம், டி.புதுப்பட்டி, சுந்தரபாண்டியம், குன்னூர், ராமச்சந்திராபுரம், கரிசல்குளம், அச்சம் தவிர்த்தான், மம்சாபுரம், மடவார்வளாகம், ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை, கீழாண்மறை நாடு, சத்திரப்பட்டி, நென்மேனி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருத்தங்கல், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, மல்லாங்கிணறு, எம்.ரெட்டியபட்டி, திருச்சுழி, நரிகுடி, பந்தல்குடி, பாலையம்பட்டி சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று மாநில பட்டியலில் 818 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட பட்டியலில் 248 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News