செய்திகள்
சிவகாசி பகுதியில் மக்கள் நடமாட்டம் உள்ளதா என போலீசார் டிரோன் கேமரா மூலம் கண்காணித்தனர்.

மக்கள் நடமாட்டத்தை டிரோன் கேமரா மூலம் கண்காணித்த போலீசார்

Published On 2021-05-27 23:29 IST   |   Update On 2021-05-27 23:29:00 IST
போலீசார் பல்வேறு பகுதியில் தடுப்புகள் அமைத்து கண்காணித்த போதும் சிறிய தெருக்கள் வழியாக இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் பலர் ஊர் சுற்றி வந்தனர்.
சிவகாசி:

சிவகாசி பகுதியில் மக்கள் நடமாட்டத்தை டிரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணித்தனர்.

முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சிவகாசி பகுதியில் மக்கள் வீட்டில் இருக்காமல் தேவையில்லாமல் வெளியே சுற்றி வருவதாக புகார்கள் எழுந்தன.

போலீசார் பல்வேறு பகுதியில் தடுப்புகள் அமைத்து கண்காணித்த போதும் சிறிய தெருக்கள் வழியாக இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் பலர் ஊர் சுற்றி வந்தனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் போலீஸ் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து சிவகாசி கிழக்கு இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் இந்த விதிமீறல்களை தடுக்க பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க டிரோன் கேமராவை ஏற்பாடு செய்தனர்.

இந்த கேமரா வானில் பறந்தப்படி 300 அடி உயரத்தில் இருந்து மக்களை கண்காணித்தது.

நாரணாபுரம்புதூர், இந்திராநகர், விருதுநகர் பைபாஸ் ரோடு ஆகிய பகுதிகளை கண்காணித்த போது பல இடங்களில் இளைஞர்கள் சாலையில் நின்று கொண்டு இருப்பதையும், ஒரு இடத்தில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருப்பதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் அந்த பகுதிக்கு சென்ற போலீசார் இளைஞர்களையும், சிறுவர்களையும் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பினர்.

பெரும்பாலான இடங்கள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

இனியும் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வந்து சாலைகளில் நின்றால் அவர்கள் மீது உரிய வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் எச்சரித்துள்ளார்.

Similar News