செய்திகள்
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

புதுவையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி- கவர்னர் தொடங்கி வைத்தார்

Published On 2021-05-20 14:43 IST   |   Update On 2021-05-20 14:43:00 IST
கோரிமேடு இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:

புதுவையில் ஜனவரி 16-ந் தேதி முதல் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

அதன்பின் 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இதனிடையே 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதனையடுத்து இன்று (வியாழக்கிழமை) முதல் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்தவர்களுக்கு எந்த மையத்தில் எந்த நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்ற தகவல் அனுப்பப்படும்.

அங்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். 18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி, கோரிமேடு பல் மருத்துவக் கல்லூரி, கோரிமேடு இ.எஸ்.ஐ. மருத்துவமனை, கோரிமேடு அரசு நெஞ்சக மருத்துவமனைகளில் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காரைக்காலில் காமராஜர் கல்லூரி வளாகம், மாகி, ஏனாமில் அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.



கோரிமேடு இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்.

சுகாதாரத்துறை செயலர் டாக்டர் அருண், இயக்குனர் மோகன்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். மத்திய அரசிடம் புதுவைக்கு 6 லட்சம் தடுப்பூசிகள் வேண்டும் என அரசு கோரியிருந்தது.

முதல்கட்டமாக தற்போது 30 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளது. தேவைகளுக்கு ஏற்ப மத்திய அரசு வழங்கும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News