செய்திகள்
விஜயகாந்த்

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தேமுதிக சார்பில் ரூ.10 லட்சம் - விஜயகாந்த் அறிவிப்பு

Published On 2021-05-14 20:10 GMT   |   Update On 2021-05-14 20:10 GMT
கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசுக்கு தாராளமாக நிதியுதவி அளியுங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
சென்னை:

தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கொரோனா நோயை கட்டுப்படுத்த ஏதுவாக பல்வேறு மாவட்டங்களில் தே.மு.தி.க.வின் சார்பாக கொரோனா நோயாளிகளுக்கு பல்வேறு நிவாரணங்களை வழங்கி உள்ளோம்.

அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு ஏற்கனவே அறிக்கை மூலம் தெரிவித்திருந்தேன். மேலும், தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தேன்.

இந்நிலையில், முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு தே.மு.தி.க. சார்பில் ரூ.10 லட்சம் வழங்க இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News