செய்திகள்
கனகன் ஏரியில் செத்து மிதந்த மீன்களை படத்தில் காணலாம்.

கனகன் ஏரியில் செத்து மிதந்த மீன்கள்: காரணம் என்ன? அதிகாரிகள் ஆய்வு

Published On 2021-05-13 15:49 GMT   |   Update On 2021-05-13 15:49 GMT
கனகன் ஏரியில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரி:

புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பின்பகுதியில் கனகன் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியை பராமரிக்க புதுச்சேரி முன்னாள் கவர்னர் கிரண்பெடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தார்.

இந்த நிலையில் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கழிவுநீர் மற்றும் அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் ஏரியில் விடப்பட்டதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று கனகன் ஏரியில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் மற்றும் சுற்றுச் சூழல் துறை அதிகாரிகள் கனகன் ஏரியை பார்வையிட்டனர். அப்போது மீன்கள் செத்து மிதந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் ஏரியில் இருந்து நீரை சோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

இதற்கிடையில் நவீன எந்திரம் மூலம் ஏரியில் மிதந்த குப்பைகள் அகற்றப்பட்டு, தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டது. இந்த ஏரியில் அடிக்கடி மீன்கள் செத்து மிதப்பது வாடிக்கையாக உள்ளது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Tags:    

Similar News