செய்திகள்
உப்பு உற்பத்தி

வேதாரண்யத்தில் இன்று அதிகாலை கனமழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு

Published On 2021-04-28 10:30 GMT   |   Update On 2021-04-28 10:30 GMT
வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளியில் பெய்த மழையால் சுமார் 3,000 ஏக்கரில் நடைபெற்றுக் கொண்டிருந்த உப்பு உற்பத்தியின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டது.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் தோப்பு துறை, அகஸ்தியன்பள்ளி, மணியன்தீவு, ஆறு காட்டுத்துறை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் விட்டு விட்டு இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது.

கடந்த ஒரு மாதமாக வாட்டி வதைத்து வந்த வெயிலின் தாக்கம் இந்த மழையினால் குறைந்தது.இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதேவேளையில் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளியில் பெய்த மழையால் சுமார் 3,000 ஏக்கரில் நடைபெற்றுக் கொண்டிருந்த உப்பு உற்பத்தியின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டது. கடுமையான வெயிலின் காரணமாக தீவிரமாக நடைபெற்று வந்த உப்பு உற்பத்தி மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் உப்பள தொழிலாளர்கள் வேலை இல்லாமல் வீடு திரும்பினர். மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்க குறைந்தபட்சம் 5 நாட்களாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். மழையின் காரணமாக தங்கள் சேமித்து வைத்திருந்த உப்பை பிளாஸ்டிக் தார்பாய் கொண்டு மூடி வைத்துள்ளனர்.

Tags:    

Similar News