செய்திகள்
வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை கொன்று 30 பவுன் நகைகள் கொள்ளை
புதுக்கோட்டையில் வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை கொன்று 30 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி சிவகாமி. இவர் மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். பழனியப்பன் இறந்துவிட்டார். இவர்களது மகள் லோகப்பிரியா (வயது 20). இவர் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் எம்.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். சிவகாமி வேலைக்கு சென்ற நிலையில் லோகப்பிரியா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
இந்த நிலையில் நேற்று சிவகாமி வேலைக்கு சென்று மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது படுக்கை அறையில் லோகப்பிரியா முகத்தில் ரத்தகாயங்களுடன் பிணமாக கிடந்தார். யாரோ மர்மநபர் வீட்டின் உள்ளே புகுந்து லோகப்பிரியாவை கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த 30 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொலையாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.