செய்திகள்
கோப்புபடம்

வேலூரில் தடுப்பூசி போட்டுக்கொண்ட திருநங்கைகள்

Published On 2021-04-24 20:02 IST   |   Update On 2021-04-24 20:02:00 IST
வேலூர் அருகே முகாமில் 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
வேலூர்:

வேலூர் ஓல்டுடவுன் வேணுகோபால் பஜனைக்கோவில் ஆதிதிராவிடர் சமுதாயக்கூடத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை டாக்டர் பிரகாஷ்அய்யப்பன் தலைமை தாங்கினார். சமூகசேவகி கங்காநாயக் முன்னிலை வகித்தார்.

முகாமில் 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதுதவிர அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மேலும், பொதுமக்களுக்கு முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Similar News