செய்திகள்
பெரிய மார்க்கெட்டில் வாங்குவதற்கு ஆள் இல்லாமல் குவிந்து கிடந்த சாமந்தி பூக்கள்.

ஊரடங்கு அறிவிப்பால் பூக்கள் விலை சரிவு

Published On 2021-04-22 04:44 GMT   |   Update On 2021-04-22 04:44 GMT
ஊரடங்கு அறிவிப்பால் புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் வாங்குவதற்கு ஆள் இல்லாமல் பூக்கள் விலை சரிந்துள்ளது.
புதுச்சேரி:

புதுவையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை முதல் மதியம் 2 மணி வரை மட்டும் கடைகள் இயங்கும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக பெரிய மார்க்கெட்டில் பூக்களின் விலை குறைந்துள்ளது. பூக்களின் நேற்றைய நிலவரம் (பழைய விலை அடைப்புக்குறிக்குள்) வருமாறு:-

மல்லிகை ஒரு கிலோ ரூ.200 (ரூ.300), முல்லை ரூ.180 (ரூ.280), கனகாம்பரம் ரூ.800 (ரூ.1400), பன்னீர் ரோஜா ரூ.160 (ரூ.220), வாடாமல்லி ரூ.80 (ரூ.200), சாமந்தி ரூ.140 (ரூ.320), கோழிக்கொண்டை ரூ.20 (ரூ.60) அரளி ரூ.60 (ரூ.210) என விற்பனை செய்யப்பட்டது.

பூக்கள் விலை கடுமையாக சரிந்ததால் வியாபாரிகள் கவலை அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, தமிழக பகுதியான விழுப்புரம், திண்டிவனம், திருவண்ணாமலை, கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் திருக்கனூர், மண்ணாடிப்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும் பூக்கள் வருகிறது. தமிழ்ப் புத்தாண்டையொட்டி கடந்த வாரம் பூக்களின் விலை அதிகரித்தது. தற்போது ஊரடங்கு காரணமாக பூக்கள் விலை அதிரடியாக சரிந்து வருகிறது என தெரிவித்தனர்.
Tags:    

Similar News