செய்திகள்
மதுபானம்

முகக்கவசம் அணியாவிட்டால் மது கிடையாது- கடைகளில் அறிவிப்பு பலகைகள்

Published On 2021-04-22 04:18 GMT   |   Update On 2021-04-22 04:18 GMT
மதுவாங்க வருபவர்களும், கடைக்காரர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுவையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இரவு நேர ஊரடங்கு, வார இறுதி விடுமுறை நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மதுபான கடைகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மதுபார்களில் இரவு 8 மணிவரை மட்டுமே அமர்ந்து மது அருந்தலாம். மொத்த, சில்லரை மதுபான கடைகளை இரவு 10 மணிக்குள் மூடவேண்டும் என்று கலால்துறை துணை ஆணையர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல் மதுவாங்க வருபவர்களும், கடைக்காரர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடையை நாள்தோறும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும், வாடிக்கையாளர்களை வரிசையாக ஒழுங்குபடுத்த தடுப்புகளை அமைக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி முகக்கவசம் அணியாவிட்டால் மது கிடையாது, முகக்கவசம் அணியாமல் கடைக்குள் நுழையக்கூடாது என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒவ்வொரு மதுக்கடையின் முகப்பிலும் அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News