செய்திகள்
விபத்து பலி

பண்ணாரி சோதனை சாவடி அருகே விபத்து- 2 வாலிபர்கள் பலி

Published On 2021-04-19 08:05 GMT   |   Update On 2021-04-19 08:05 GMT
பண்ணாரி சோதனை சாவடி அருகே விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் பொன்மனச்செல்வன் (19), பிரதீபன் (16), முகேஷ் (21). இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.

நேற்று இரவு 11 மணி அளவில் இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பண்ணாரியில் இருந்து பவானிசாகர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது பண்ணாரி சோதனைசாவடி அருகே உள்ள கொக்கரகுண்டி ராஜீவ்நகர் மொக்கை என்ற இடத்தில் வந்தபோதுஅந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர்கள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திலேயே பொன்மனச்செல்வன், பிரதீபன் ஆகியோர் உடல் நசுங்கி பலியானார்கள். முகேஷ் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதுபற்றி தெரிய வந்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த முகேஷை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பலியான 2 பேர் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News