செய்திகள்
முக கவசம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே ரேஷன் பொருட்கள் - அதிகாரி உத்தரவு

Published On 2021-04-12 22:48 GMT   |   Update On 2021-04-12 22:48 GMT
ஸ்ரீவில்லிபுத்தூரில் முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என வட்ட வழங்கல் அதிகாரி கோதண்டராமன் கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:

கொரோனா பாதிப்பை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்தநிலையில் கொரோனா பாதிப்பை தடுப்பது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வட்ட வழங்கல் அதிகாரி கோதண்டராமன் தலைமை தாங்கினார்.

இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள 76 ரேஷன் கடைகளை சேர்ந்த 52-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.

ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் முக கவசம் அணிந்து இருந்தால் மட்டுமே பொருட்கள் வழங்க வேண்டும்.

அதே போல் அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்கும்போது குடும்ப உறுப்பினர்கள் ஒருவரின் கைரேகை பதித்து பொருட்கள் வழங்க வேண்டும்.

வயது முதிர்ந்தவர்கள் ரேஷன் பொருட்களை வாங்க வரும்போது அவர்களுடைய ரேகை பதிவு ஆகா விட்டால் கூட பதிவேடு மூலம் கையெழுத்து பெற்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் 100 சதவீத கைரேகை பதித்து பொருட்களை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.


இதுகுறித்து வட்ட வழங்கல் அதிகாரி கோதண்டராமன் கூறியதாவது:- கொேரானா பரவலை தடுக்கும் வகையில் முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க அனைவரும் அரசு கூறிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News