செய்திகள்
கோப்புபடம்

பவானிசாகர் அருகே விபத்தில் வாலிபர் பலி

Published On 2021-04-05 15:19 IST   |   Update On 2021-04-05 15:19:00 IST
பவானிசாகர் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பவானிசாகர்:

பவானிசாகர் அருகே உள்ள புதுபீர்கடவு பட்ரமங்கலத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 30). இவர் அந்த பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் நேற்று சென்று கொண்டிருந்தார். பவானிசாகரை அடுத்த தொப்பம்பாளையம் ரோட்டில் கிரஷர் மேடு அருகே சென்றபோது எதிரே வந்த ஜீப்பும், மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து முருகன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே முருகன் இறந்துவிட்டதாக கூறினர்.

இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News