செய்திகள்
தற்கொலை

காவேரிப்பட்டணம் அருகே விவசாயி தற்கொலை

Published On 2021-03-24 14:49 IST   |   Update On 2021-03-24 14:49:00 IST
காவேரிப்பட்டணம் அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்: 

காவேரிப்பட்டணம் அருகே உள்ள அரிக்கன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 42). விவசாயி. கடன் தொல்லை காரணமாக மனமுடைந்து  காணப்பட்ட அவர் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை  அளித்தும் பலனின்றி கோவிந்தசாமி இறந்தார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News