செய்திகள்
செங்கல்பட்டில் லாட்டரி டிக்கெட் விற்றவர் கைது
செங்கல்பட்டில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லாட்டரி டிக்கெட் விற்ற நபரை கைது செய்தனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ரெயில் நிலையம், ராட்டிண கிணறு மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்கப்படுவதாக தொடர்ந்து போலீசாருக்கு தகவல் வந்த வண்ணம் இருந்தது. லாட்டரி சீட்டு விற்பனையை முழுமையாக தடை செய்யும் நோக்கத்துடன் அடிக்கடி போலீசார் ரோந்துப்பணியில் சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அது போல நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்ட போது செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகே லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்த களத்தூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 40) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் லாட்டரி சீட்டு விற்றது உறுதி செய்யப்பட்டது.
மேலும் லாட்டரி சீட்டு எண்கள் அடங்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ரமேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.