செய்திகள்
சிவகாசி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அசோகன் மனு தாக்கல் செய்தார்.

சிவகாசி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம் உள்பட 8 பேர் மனு தாக்கல்

Published On 2021-03-19 23:46 IST   |   Update On 2021-03-19 23:46:00 IST
சிவகாசி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அசோகன் மனு தாக்கல் செய்தார்.
சிவகாசி:

சிவகாசி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட நேற்று காலை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அசோகன் தேர்தல் அதிகாரி தினேஷ்குமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது தி.மு.க. மாநில நிர்வாகி வன ராஜா, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ராஜாசொக்கர் ஆகியோர் உடன் இருந்தனர். 

இவரை தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் முகுந்தன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரை தொடர்ந்து சுயேச்சைகளாக கண்ணன், தங்கராஜ், பாண்டியராஜ், பாலகிருஷ்ணன், கணேசன், ஜேசுதாஸ் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். சிவகாசி சட்டமன்ற தொகுதியில் இதுவரை அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News