செய்திகள்
மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
சென்னையை அடுத்த பழைய பல்லாவரம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோகர்(வயது 24). மாற்றுத்திறனாளி. நேற்று முன்தினம் இவரது பெற்றோர் துக்க நிகழ்ச்சிக்காக வெளியே சென்று விட்டனர். திரும்பி வரும்போது குளிப்பதற்கு வெந்நீர் போட்டு வைக்குமாறு மனோகரிடம் கூறிவிட்டு சென்றனர்.
துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, தங்கள் மகன் மனோகர், இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வெந்நீர் போடுவதற்காக சுவிட்சை ஆன் செய்தபோது, மின்சாரம் தாக்கி மனோகர் இறந்தது தெரியவந்தது. இதுபற்றி பல்லாவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.