செய்திகள்
மயிலாடுதுறையில் உள்ள ஒரு டீக்கடையில் வெந்நீருக்கு விலைப்பட்டியல்வைத்துள்ளதை படத்தில் காணலாம்.

கியாஸ் விலை உயர்வால் டீக்கடையில் 1 லிட்டர் வெந்நீர் ரூ.20-க்கு விற்பனை

Published On 2021-03-15 13:00 IST   |   Update On 2021-03-15 13:00:00 IST
மயிலாடுதுறையில் கியாஸ் விலை உயர்வால் டீக்கடையில் 1 லிட்டர் வெந்நீர் ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மயிலாடுதுறை:

தமிழகத்தில் எந்த டீக்கடைக்கு சென்றாலும் குடிக்க தண்ணீர் கேட்டால் தயக்கமின்றி குடிநீரை வழங்கி வருவதில் முன்னணியில் உள்ளது டீக்கடைகள் மட்டுமே. மேலும் குழந்தைகளுக்கோ, பெரியவர்களுக்கோ வெந்நீர் கேட்டால், டீ போடுவதற்கு பாய்லரில் சூடாகி கொண்டே இருக்கும் வெந்நீரை தயக்கமின்றி பிடித்து கொடுப்பார்கள். இதை இன்றும் டீக்கடைக்காரர்கள் கடைபிடித்து வருகின்றனர். இந்தநிலையில் மயிலாடுதுறை பட்டமங்கல கடைவீதியில் உள்ள பிரபல டீக்கடையின் டேபிள் பக்கத்தில் ஒரு நோட்டீசை ஒட்டி வைத்துள்ளனர்.

அதில் கியாஸ் விலை உயர்வு காரணமாக அரை லிட்டர் வெந்நீர் ரூ.10, 1 லிட்டர் வெந்நீர் ரூ.20, வென்னீர் இலவசம் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து டீக்கடை ஊழியர் ஒருவர் கூறுகையில், 2014-ம் ஆண்டு கடைகளுக்கு உபயோகப்படுத்தும் 19 கிேலா எடை கொண்ட கமர்சியல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1,050 என்று விற்பனை செய்யப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது ரூ.1,800 வரை விற்பனை செய்யப்படுகிறது. கியாஸ் விலை உயர்வினால் வெந்நீரை விற்பனை செய்யும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம் என்றார்.

Similar News