செய்திகள்
குளித்தலை அருகே மது விற்ற முதியவர் கைது
குளித்தலை அருகே மது விற்ற முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை:
குளித்தலை அருகே உள்ள கோட்டமேடு பகுதியில் மது விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில் குளித்தலை போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த நாராயணன் (வயது 64) என்பவர் அவரது வீட்டில் வைத்து மது விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 20 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.