செய்திகள்
கோப்பு படம்.

அரியாங்குப்பம் அருகே மனைவியை மிரட்ட எலிமருந்து தின்ற டிரைவர் மரணம்

Published On 2021-03-14 00:01 IST   |   Update On 2021-03-14 00:01:00 IST
அரியாங்குப்பம் அருகே மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் டிரைவர் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

அரியாங்குப்பம் அருகே மணவெளி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் ஸ்ரீதரன் (வயது 29). டிரைவர் வேலை செய்து வந்தார்.

இவருக்கு திருமணமாகி பவித்ரா என்ற மனைவியும், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. மது குடிக்கும் பழக்கம் உள்ள ஸ்ரீதரன் கடந்த சில மாதங்களாக சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார்.

மேலும் குடும்ப செலவுக்கும் பணம் கொடுப்பது இல்லை. இதனால் ஸ்ரீதரனுக்கும், அவரது மனைவி பவித்ராவுக்கும் அடிக்கடி பிரச்சினை இருந்து வந்தது.

சம்பவத்தன்று இரவும் இது தொடர்பாக கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மனைவியை மிரட்டுவதற்காக ஸ்ரீதரன் வீட்டில் இருந்த எலி மருந்தை தின்றார்.

இதில் மயங்கி விழுந்த ஸ்ரீதரனை குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீதரன் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாப மாக இறந்து போனார்.

இதுகுறித்து அவரது தந்தை வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News