செய்திகள்
தற்கொலை

முத்தியால்பேட்டையில் வாலிபர் தற்கொலை

Published On 2021-03-13 06:34 IST   |   Update On 2021-03-13 06:34:00 IST
முத்தியால்பேட்டையில் நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது சகோதரர் மணிகண்டன்(வயது 30). இவர்களது பெற்றோர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். மணிகண்டன் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. சமீப காலமாக நோயின் கொடுமை அதிகமானதால் அவர் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மணிகண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த புகாரின் பேரில் சோலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News