செய்திகள்
கோப்பு படம்.

செங்கல்பட்டு அருகே வங்கியை முற்றுகையிட்ட பெண்கள்

Published On 2021-03-11 21:18 IST   |   Update On 2021-03-11 21:18:00 IST
செங்கல்பட்டு அடுத்த பொண்விளைந்த களத்தூரில் இந்தியன் வங்கி உள்ளது. இந்த வங்கியை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு அடுத்த பொண்விளைந்த களத்தூரில் இந்தியன் வங்கி உள்ளது. இந்த வங்கியை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் வங்கி கணக்கு புத்தகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வரவு, செலவு கணக்கு பதிவேற்றம் செய்யவில்லை, இதனால் வங்கி கடன் பெற முடியாத நிலை உருவாகியுள்ளது, வங்கி கடன் பெற்றவர்கள் வட்டி செலுத்தினால் அசல் கொடுக்க சொல்லி கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

வட்டி பணத்தை வங்கி நிர்வாகம் வாங்க மறுக்கிறது என்று புகார் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வங்கி கணக்கு புத்தக வரவு செலவு கணக்கை பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

இன்று (வியாழக்கிழமை) இந்தியன் வங்கி அதிகாரிகள் காஞ்சீபுரத்தில் இருந்து வரவுள்ளனர். அவர்களிடம் உங்கள் குறைகளை தெரிவியுங்கள் என்று கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Similar News