செய்திகள்
கைது

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் கைது

Published On 2021-03-06 18:29 GMT   |   Update On 2021-03-06 18:29 GMT
கிராமங்களில் அனுமதியின்றி வீடுகளிலும், காட்டுப் பகுதிகளிலும், ஷெட் அமைத்து பட்டாசு தயாரிப்பது நடைபெற்று வருகிறது.
தாயில்பட்டி:

வெம்பக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட சில கிராமங்களில் அனுமதியின்றி வீடுகளிலும், காட்டுப் பகுதிகளிலும், ஷெட் அமைத்து பட்டாசு தயாரிப்பது நடைபெற்று வருகிறது. இது குறித்து வெம்பக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் ராமராஜ் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் போலீசார் வெம்பக்கோட்டை ஆற்றுப்படுகையில் சோதனை நடத்தினர். அப்போது வெம்பக்கோட்டையை சேர்ந்த மாரிமுத்து (வயது 35), ஷெட் அமைத்து அனுமதியின்றி பட்டாசு தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் வெற்றிலையூரணி கிராம நிர்வாக அலுவலர் கணேசன் கொடுத்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தெற்கு ஆனைக்குட்டம் காட்டுப்பகுதியில் சோதனை நடத்தினார். அப்போது அனுமதியின்றி பட்டாசு தயாரித்ததாக கோமாளிபட்டியை சேர்ந்த முத்துராஜ், தெற்கு ஆனைக்குட்டத்தைச் சேர்ந்த முத்து கணேஷ், கருப்பசாமி, ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் கருப்பசாமி (29) கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 60 கிலோ சரவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவான முத்துராஜ், முத்துகணேஷ், ஆகியோரை வெம்பக்கோட்டை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News