செய்திகள்
விதி மீறி செயல்பட்ட 11 பட்டாசு ஆலைகளுக்கு சீல் - வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை நடவடிக்கை
கடந்த பிப்ரவரி மாதத்தில் விருதுநகர் மாவட்டத்தில் அடுத்தடுத்து 4 பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர்.
சிவகாசி:
சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை துணை முதன்மை அதிகாரி சுந்தரேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த பிப்ரவரி மாதத்தில் விருதுநகர் மாவட்டத்தில் அடுத்தடுத்து 4 பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விதிகளை மீறி செயல்படக் கூடாது என பலமுறை அறிவுறுத்தப்பட்டும் விபத்து ஏற்பட்டது வருத்தமளிக்கிறது.
விருதுநகர் மாவட்டத்தில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள் சுமார் 800-க்கு மேல் உள்ளன. இந்த ஆலைகளை ஆய்வு செய்ய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் தலைமையில் இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பல பட்டாசு ஆலை களில் ஆய்வு செய்தது.
இதில் மரத்தடியில் பட்டாசு தயார் செய்தது, அளவுக்கு அதிகமாக மருந்து இருப்பு வைத்திருந்தது, விதியை மீறி பட்டாசு தயாரிக்கும் அறையில் அளவுக்கு அதிகமாக பணியாளர்களை கொண்டு வேலை செய்தது உள்ளிட்ட பல விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு 11 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து ஆய்வு நடைபெறும்.
இல்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.