செய்திகள்
அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மாணவி ஒருவருக்கு டேட்டா கார்டு வழங்கிய போது எடுத்த படம்.

44 கல்லூரிகளை சேர்ந்த 26 ஆயிரம் மாணவர்களுக்கு 2ஜிபி டேட்டா கார்டு - அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி வழங்கினார்

Published On 2021-02-22 13:43 GMT   |   Update On 2021-02-22 13:43 GMT
விருதுநகர் மாவட்டம் முழுவதும் 44 கல்லூரிகளை சேர்ந்த 26 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு டேட்டா கார்டுகளை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.
சிவகாசி:

சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியில் உயர்கல்வித்துறையின் மூலம் விலையில்லா டேட்டா கார்டுகளை மாணவிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் கண்ணன் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மாணவிகளுக்கு விலையில்லா டேட்டா கார்டுகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா தொற்று காரணமாக கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் இணைய வழி வகுப்புகள் மூலமாக மாணவ, மாணவிகள் சிறந்த முறையில் கல்வி கற்றிட அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை, மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பிப்ரவரி- 2021 முதல் மே-2021 வரை 4 மாதங்களுக்கு நாளொன்றுக்கு விலையில்லா 2 ஜிபி டேட்டா பெற்றிட திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் 44 அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை, மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 25,822 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா டேட்டா கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது.

மாணவ, மாணவிகள் இதனை நல்லமுறையில் பயன்படுத்தி கல்வியறிவை வளர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார், எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி முதல்வர் பழனீஸ்வரி, சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் காந்திமதி, பேராசிரியர் விஜயகுமாரி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சுபாஷினி, அ.தி.மு.க. நிர்வாகிகள் ரவிச்சந்திரன், பொன் சக்திவேல், அசன் பதுருதீன், ஜி.டி.பி.ஆர். கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News