செய்திகள்
கோப்புப்படம்

ராஜபாளையத்தில் ஆதார் அட்டையில் தொலைபேசி எண் சேர்க்க முடியாமல் பொதுமக்கள் தவிப்பு

Published On 2021-02-16 18:12 GMT   |   Update On 2021-02-16 18:12 GMT
ராஜபாளையத்தில ஆதார் அட்டையில் தொலைபேசி எண் சேர்க்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
ராஜபாளையம்:

ராஜபாளையத்தில ஆதார் அட்டையில் தொலைபேசி எண் சேர்க்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசின் நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் அட்டை அவசியம் ஆகும்.

பெரும்பாலான ஆதார் அட்டையில் தெரு பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட பல தகவல்கள் பிழையாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. பிழைத்திருத்தம் மற்றும் புதிதாக தொலைபேசி எண் பதிவு செய்வதற்கு கிராமப்பகுதியிலிருந்து எண்ணற்ற பொதுமக்கள் அன்றாடம் ராஜபாளையம் நகருக்கு வருகின்றனர்.

ராஜபாளையம் தாலுகா அலுவலகம், தபால் அலுவலகம், ஒரு தனியார் வங்கி என சில இடங்களில் மட்டுேம ஆதார் அட்டை பிழை திருத்தும் பணி, செல்போன் எண் மாற்றுதல் உள்ளிட்டவை செய்யப்படுகிறது.

வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒருவர் மட்டுமே இப்பணியை மேற்கொண்டு வருகிறார். தினமும் எண்ணற்ற பேர் பிழைத்திருத்தம், தொலைபேசி எண் பதிவு செய்ய வருவதாக கூறப்படுகிறது.

எனவே கூட்டத்தை தவிர்க்க டோக்கன் வழங்கப்படுகிறது. டோக்கன் வாங்குவதற்கு வரிசையில் பல மணிநேரம் காத்து கிடந்து அவதிக்குள்ளாகின்றனர்.

அவ்வாறு டோக்கன் பெற்றாலும் மேற்கண்ட மையங்களில் தினமும் 20 பேருக்கு மட்டுமே ஆதாரில் திருத்தம் செய்து தரப்படுகிறது.

தினமும் குறைவான எண்ணிக்கையில் பிழைத்திருத்தம் மேற்கொள்வதால் பலர் பல மாதங்களுக்கு காத்துக்கிடக்கவேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள் மற்றும் போட்டி தேர்விற்கு விண்ணப்பிப்பவர், பத்திரப்பதிவு செய்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே பொதுநலன் கருதி தாலுகா அலுவலகத்தில் இயங்கிவரும் இ-சேவை மையத்தில் கூடுதல் பணியாளர்கள் நியமித்து பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

அத்துடன் ஆதாரில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில் கூடுதல் மையங்களை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News