செய்திகள்
விபத்து பலி

கார் மோதி முன்னாள் ராணுவ வீரர் பலி

Published On 2021-02-12 15:45 IST   |   Update On 2021-02-12 15:45:00 IST
கார் மோதி முன்னாள் ராணுவ வீரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் தளவாய் பாண்டியன் (வயது 49). முன்னாள் ராணுவ வீரர். இவர் தினமும் காலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம். அதன்படி நேற்று தளவாய்பாண்டியனும், அவரது சகோதரர் சஞ்சீவி பாண்டியனும் நடைபயிற்சி சென்றனர். ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த கார் ஒன்று தளவாய் பாண்டியன் மீது மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த தளவாய் பாண்டியனை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தளவாய் பாண்டியன் மகன் விக்னேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரோபிஜெஸ்டஸ் என்பவரை கைது செய்தனர்.

Similar News