செய்திகள்
காட்டு யானைகள் வாழை மரங்களை சேதப்படுத்தி உள்ளதை காணலாம்.

விளை நிலங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்- விவசாயிகள் கவலை

Published On 2021-02-11 10:38 GMT   |   Update On 2021-02-11 10:38 GMT
வத்திராயிருப்பு அருகே விளை நிலங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
வத்திராயிருப்பு:

வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, கரடி, மான், மிலா, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

வத்திராயிருப்பு அருகே உள்ள பிளவக்கல் அணை, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை, மா, வாழை ஆகியவற்றை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர்.

பிளவக்கல் அணை பகுதி வழியாக இறங்கும் காட்டு யானைகள் தோப்புக்குள் நுழைந்து தென்னை, மா, வாழை மரங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.

பிளவக்கல் அணை பகுதியில் உள்ள விவசாயிகள் வாழை விவசாயம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து பிளவக்கல் பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்த காட்டுயானைகள் அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள ஏராளமான வாழை, தென்னை, மரங்களை சேதப்படுத்தி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதலால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

தொடர்ந்து இது போன்று விளை நிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே வனத்துறையினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், காட்டு யானையை விரட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News