செய்திகள்
சாத்தூரில் மாற்றுத்திறனாளிகள் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம்

Published On 2021-02-10 19:27 IST   |   Update On 2021-02-10 19:27:00 IST
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாற்றுத்திறனாளிகள் அரசு அலுவலகங்களில் குடிேயறும் போராட்டம் நடைபெற்றது.
சாத்தூர்:

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சாத்தூரில் உள்ள தாலுகா அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு அழகுராணி தலைமை தாங்கினார். சீதா, நந்தினி, முனீஸ்வரி, கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தெலுங்கானா, புதுச்சேரியை போல மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.3 ஆயிரமாகவும், கடும் ஊனமுற்றோருக்கு ரூ.5 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும்.

பராபட்சம் இல்லாமல் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் திரளான பேர் கலந்து கொண்டனர்.

அதேபோல சேத்தூர் மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமை சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு சங்கத்தின் ராஜபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் ராமர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News