செய்திகள்
கோப்புபடம்

சாத்தூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

Published On 2021-02-10 19:23 IST   |   Update On 2021-02-10 19:23:00 IST
சாத்தூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:

சாத்தூர் அண்ணாநகரை சேர்ந்த மாரியப்பன் மகன் சந்திரகாந்த் (வயது32). கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (30). சந்திரகாந்த் அடிக்கடி குடித்து விட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. ஆதலால் சாந்தி அவரது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். 

இந்தநிலையில் நேற்று காலை வந்து பார்த்த போது சந்திரகாந்த் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து சாந்தி கொடுத்த புகாரின் படி சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News